இந்தியாவின் பிரபல தொழிலதிபர் தற்கொலையா...கொலையா? வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

Report Print Basu in இந்தியா

காஃபி டே நிறுவன உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வென்லாக் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் முதன்மை பிரேத பரிசோதனை கண்டுபிடிப்புகளை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். உள்ளுறுப்பு மாதிரிகள் மற்றும் பிற சோதனை முடிவுகளின் பகுப்பாய்வு வர இன்னும் நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது

உடலில் மாற்றங்கள் உள்ளன. ஒரு உடல் சிதைவடையத் தொடங்கும் போது இது நிகழ்கிறது, இது ஒரு இயற்கையான செயல். முதன்மை பிரேத பரிசோதனை, இப்போதைக்கு தவறான சந்தேகங்களை குறிக்கவில்லை. இது தற்கொலை வழக்கு என்று தோன்றுகிறது என்று அறிக்கையில் இடம்பெற்றதாக அதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரிகள் அனைத்து முடிவுகளும் வெளிவரும் வரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் தகவல்களை தருவார்கள் என ஹனுமந்தராய துணை பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சித்தார்த்தா நீரில் மூழ்கி இறந்தார் என்பது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அவரது நுரையீரலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நீர் அதைக் குறிக்கிறது, எனவே எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எவ்வாறாயினும், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் வேதியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது அறிக்கையை தடயவியல் ஆய்வகங்களால் இன்னும் சமர்பிக்கவில்லை. இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்