வேலைக்கார பெண்ணை அறைக்குள் இழுத்து சென்றேன்.. அப்போது.. கதறி அழுதபடி நடந்ததை விளக்கிய கொடூரன்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொடூரமாக கொலை செய்த கொலையாளி தப்பு செய்துவிட்டேன் என அழுது புலம்பியுள்ளார்.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

அதாவது, உமாவால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்ற கோபத்திலேயே கொலை செய்ததாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஒன்றும் அறியாத வேலைக்கார பெண் மாரியம்மாள் கொல்லப்பட்டது தான் பலருக்கும் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது.

அவரை சமையல் அறைக்குள் இழுத்து சென்று கத்தியால் குத்தி கொன்றதாகவும், ரத்த கறையை அங்குள்ள தண்ணீரில் கழுவியதாகவும் கார்த்திகேயன் கூறினார்.

இந்நிலையில் பொலிசார் கார்த்திகேயனிடம், உனக்கும் மேயருக்கும் தானே பிரச்சனை அப்புறம் ஏன் அந்த வேலைக்காரப் பெண்ணை கொன்றாய்? எனக் கேட்டதற்கு, சத்தியமாக அவரை கொலை செய்யும் எண்ணமே இல்லை.

கதவை திறந்து வந்த அவர் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டதும் அழுது கத்தத் தொடங்கினார். ஓடிப்போய் விடு என நான் கோபமாய் கத்தியும் மாரியம்மாள் போகவில்லை.

வெளியில் கத்தி என்ன காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் வேறு வழியில்லாமல் அவரையும் கொலை செய்தேன்.

மாரியம்மாள் என்னிடம் எனக்கு மூனு பிள்ளைகள் இருக்காங்க, என்ன விட்டுவிடு என கெஞ்சினார், அது ஆண் பிள்ளைகளாக இருக்கும், எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என நினைத்து அவரை கொலை செய்துவிட்டேன்.

பிறகு தான் மூவரும் பெண் பிள்ளைகள் என தெரியவந்தது எனகூறியவாறு முகத்தை மூடி கொண்டு அழுதுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்