லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு... லண்டல் செல்லும் ஜெயலலிதா அண்ணன் மகள்? குமுறும் நிர்வாகிகள்

Report Print Santhan in இந்தியா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவருடைய இடத்தை தீபா நிரப்புவார் என்று அதிமுகவை சேர்ந்த பலரும் அவருடைய கட்சிக்கு பின்னால் இணைந்த நிலையில், அவர் தற்போது லண்டல் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போதுவரை ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. அதைப் பற்றி எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், அதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை வெளிக்கொண்டுவருவார் என்று எண்ணி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவங்கிய எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவையில் அதிமுகவின் பலர் இணைந்தனர்.

ஆனால் கடந்த 30-ஆம் திகதி திடீரென்று தீபா, உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சையில் இருக்கிறேன். என்னைத் தூங்கக்கூட விடாமல் பேரவையை நடத்தச் சொல்லித் துன்புறுத்துகிறார்கள். என்னையும் என் கணவரையும் நிம்மதியாக வாழவிடுங்கள். நான் எதிர்பார்த்து வந்த அரசியல் இது அல்ல. என்னால் பேரவையை நடத்த முடியாது என்பதால், அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அவர் இப்படி அரசியலில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம், தன் பேரவையில் இணைந்த சிலருக்கு மாநில அளவில் பொறுப்பு கொடுப்பதாக கூறி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொண்டு சிலரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இவரை நம்பி வந்த பலரையும் அவர் தெருவில் நிற்கவிட்டுவிட்டதாக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் தீபா, இதை எல்லாம் விட்டு லண்டன் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் லண்டன் செல்வதற்கு முக்கிய காரணம் பணம் கொடுத்தவர்களின் நெருக்கடி தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்