10 நாட்கள் தான் காதலித்தோம்! திருமணமான 20 நாளில் கணவரை எரித்து கொன்ற புதுப்பெண் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 20 நாட்களில் கணவரை எரித்து கொன்ற மனைவி பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி (24). இவரும் முருகவேணி (19) என்ற இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 11-ம் திகதி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு கூரைவீட்டில் இருவரும் வசித்த வந்த நிலையில் அவர்களுடன் முருகவேணியின் தாய் குமுதா மற்றும் சகோதரனும் அங்கேயே தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் சேதுபதியின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்போது வீடு முற்றிலும் எரிந்த நிலையில் வெளிப்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது.

பொலிசார் வீட்டுக்குள் பார்த்தபோது உடல் கருகிய நிலையில் சேதுபதி சடலமாக கிடந்தார். அங்கு முருகவேணியை காணவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் முருகவேணி வீட்டுக்கு வந்து, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சேதுபதியை யாரோ கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதினர்.

இதையடுத்து பொலிசார் முருகவேணியை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா, மதுவுக்கு அடிமையான சேதுபதி திருமணமான இரண்டாவது நாளிலிருந்தே குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, என் நடந்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.

இதனால் ஏற்பட்ட கோபத்தில் தூங்கிக்கொண்டிருந்த சேதுபதியை உயிரோடு வீட்டுடன் தீவைத்து எரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் இதை விபத்து என நம்ப வைக்க முயன்று அதுமுடியாமல் போனதாகவும் கூறினார்.

இதோடு நாங்கள் இருவரும் 10 நாட்கள் தான் காதலித்தோம், பின்னர் திருமணம் செய்து கொண்டோம் என கூறி பொலிசாரை அதிர வைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்