35-ஏ ரத்து.. மூன்றாக பிரிகிறது காஷ்மீர்? கசிந்தது மத்திய அரசின் திட்டம்

Report Print Basu in இந்தியா

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு புதியதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சாசன பிரிவுகளில் ஒன்றான 35-ஏவை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதால்தான் அம்மாநிலத்தில் 10,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பக்தர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு, பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதால் காஷ்மீர் மக்கள் மத்தியில் அச்சமடைந்துள்ளனர். அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers