செல்போனுடன் தனியாக சென்ற மனைவி.. திரும்பி வந்தவுடன் கொடூரமாக கொன்ற கணவன்.. அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவியை கொலை செய்த கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (32). ரமேஷ்குமார் பனியன் தொடர்பான வியாபாரம் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டது, இதையடுத்தே அவர் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

நஷ்டம் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ரமேஷ்குமார் மதுகுடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இதனால் கணவனுடன் கோபித்து கொண்டு பிரியா செல்வலட்சுமிநகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென பிரியாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரமேஷ்குமார், பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவை சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.

அவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். ரமேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அதிக பணம் தேவைப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்னை விட்டு பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு அவளுடைய வீட்டிற்கு சென்ற நான், அவளை என்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது, எனது மாமா பிரியாவுக்கு 4 பவுன் நகை வாங்கி கொள்ளும்படி, அவளிடம் பணம் கொடுத்திருந்தார். இதை கவனித்த நான் அந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை செலவுக்காக கேட்டேன்.

ஆனால் அவள் தரமறுத்து விட்டாள், இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த சமயம் அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்த அவள், தனியாக சென்று பேசிவிட்டு வந்தாள். போனில் பேசியது யார் என்று அவளிடம் கேட்டேன்.

அதற்கு அவள், நான் யாரிடம் பேசினேன்? எதற்கு பேசினேன்? என்ற கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம் என்று அலட்சியமாக கூறினாள். தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வந்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நான் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்