லாக்-கப் அருகே பெண் காவலர் செய்த காரியம்! வைரலான வீடியோவால் வந்த வினை

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர், லாக் அப் அருகே நின்று டிக் டாக் வீடியோ செய்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் அர்பிதா சௌத்ரி. இவர் அடிக்கடி டிக் டாக் செயலியை பார்த்துக் கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தானும் டிக் டாக் வீடியோ செய்ய வேண்டும் என்று விரும்பிய அர்பிதா, காவல் நிலையத்தில் லாக்-அப் அருகே நின்று, சீருடை இல்லாமல் சாதாரண உடையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவை அவர் டிக் டாக் செயலியில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இணையத்தில் வைரலானது. அதன் பின்னர், காவல் நிலையத்திற்குள் இப்படி காவலர் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா? என கண்டனங்கள் எழுந்தன.

இதனை அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், அர்பிதா சௌத்ரியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா கூறுகையில், ‘பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல் இருந்திருக்கிறார். அதோடு, காவல் நிலையத்திற்குள் வீடியோ எடுத்திருக்கிறார். காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை மீறியுள்ளார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers