நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் குமாரசாமி

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்துள்ளது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆளும் அரசின் மீது நம்பிக்கையிழந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பை சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அதே சமயம் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் நிலுவைக்கு பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது.

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதன்மூலம் பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க கோரி ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்