முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் கொடூரமாக வெட்டிக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

Report Print Vijay Amburore in இந்தியா

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் மற்றும் பணிப்பெண்ணுடன் சேர்ந்தது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 1996ம் ஆண்டு நெல்லை மேயராக பதவி வகித்தவர். இவரது மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகி விட்டார். மகள் கார்த்திகா நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மகேஸ்வரியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், மகேஸ்வரி அவருடைய கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் மாரி (30) என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விதவை பெண்ணான மாரிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்