பேருந்தில் அரிவாளுடன் புகுந்து மாணவர்களை வெட்டிய கல்லூரி மாணவர்கள்.. அலறிய பொதுமக்கள்! வீடியோ

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் புகுந்து, வேறு மாணவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர், பேருந்தில் இருந்து மற்றொரு மாணவரை கீழே இறக்கி, தாங்கள் கொண்டு வந்த அரிவாள்களால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

கையில் அரிவாள்களுடன் பேருந்தில் புகுந்த மாணவர்களை பார்த்து பயணிகள் பீதியில் அலறினர். மாணவர்களுக்கு இடையேயான பிரச்சனை காரணமாக இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வருவதற்குள் குறித்த மாணவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதற்கிடையில் காயமடைந்த மாணவரின் பெயர் வசந்த் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்