லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட பரோல்! ஆனாலும் அவர் விடுவிக்கப்படாத காரணம் என்ன?

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, பரோலில் வெளியில் வர தாமதம் ஏன் என கேள்வி எழுந்துள்ள நிலையில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களே அதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாட்டுக்காக தனக்கு பரோல் வேண்டும் என நளினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு ஒருமாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இதோடு 10 நாட்களுக்குள் பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், நளினி கடந்த 16-ந் திகதி பரோலில் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வரவில்லை. இன்று பரோலில் வெளியே வருவார் என்று கூறப்பட்டது. அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 நாட்களில் நளினியை பரோலில் விட வேண்டும் என நீதிமன்றம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. இதற்கு பிறகும் அவர் சிறையிலிருந்து வெளியில் வராதது அவர் குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்