நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு... கதறி அழுத உறவினர்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லேஷ். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்ற சொந்தக்கார பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் இருவரும் தங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த காதல் ஜோடி மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில் ஜோதிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க அவர்கள் பெற்றோர் தீவிரம் காட்டி வந்ததால்,

இந்த காதல் ஜோடி, வேறு வழி தெரியாமல் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியேறி காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இருவருமே தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலை தகவல் அறிந்து உறவினர்களும், கிராம மக்களும் அங்கு சென்று பார்த்த போது, காதல் ஜோடியின் உடல்கள் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இருவரின் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்