காதலனின் தாயை மரத்தில் கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

கடலூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காதலனின் தாயை, காதலியின் தந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த பொன்னுச்சாமி - செல்வி தம்பதியினருக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.

இது பெண் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுபிடிக்காத காதல் ஜோடியினர் இருவரும் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் செல்வி வீட்டிற்கு வந்த கொளஞ்சி, மகள் எங்கே எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

அதன்பிறகு செல்வியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளார். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற செல்வி, பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்