நெருக்கும் நோய்கள்... கண்களில் இருந்து வழியும் நீர்: சிறையில் சசிகலாவின் தற்போதைய பரிதாப நிலை

Report Print Santhan in இந்தியா

பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா நோயின் தாக்கத்தினால் தொடர்ந்து மெலிந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இதில் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனால் சசிகலா, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பான அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சசிகலா நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தினகரனும், சசிகலாவை வெளியில் எடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளதால், விரைவில் அவர் விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சசிகலா சிறையில் எப்படி இருக்கிறார் என்பதை பிரபல தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், தன்னை பார்க்க வந்தவர்களிடம் ஒரு லிட்டர் பால் தர முடியுமா, இங்கு சிறையில் கேட்டால் வங்கித்தர மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரைக் குறைபாட்டினால் அவதிப்பட்டு வரும் அவர், தற்போது சிறைச்சாலையில், உடல்நலிவுக்கு ஆளாகியிருக்கிறார்.

கழுத்தின் பின்புற மூட்டு தேய்மானம், இதனால் தலைச்சுற்றல் உட்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார். முதுகுத்தண்டில் ஏற்படும் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வழிந்துகொண்டிருக்கிறது. சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் போல இந்தப் பிரச்னைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அக்ரஹார சிறையில் இரண்டாம் வகுப்பிலே சசிகலா இருக்கிறார்.

முதல் வகுப்பு என்றால் ஓரளவிற்கு வசதிகள் இருக்கும், ஆனால் அவர் இரண்டாம் வகுப்பிலே இருப்பதால், சாதரண கைதிகளுக்கு கொடுக்கப்படும் வசதிகளே அவர்களுக்கும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்