என் மனதில் இது ஆறாத வடுவாக இருக்கும்- சரவணபவன் ராஜகோபால் மரணம் குறித்து ஜீவஜோதி

Report Print Abisha in இந்தியா

என் கணவர், பிரின்ஸ்சாந்த குமார் கொலை வழக்கில் சிறை செல்லாமல் உயிரிழந்த ராஜகோபாலின் மரணம் எனக்கு ஆறாத வடுவாக இருக்கும் என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், ஜெயிலில் அடைப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ராஜகோபாலால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதி இது குறித்து தெரிவித்திருப்பது.

என் கணவர் கொலை வழக்கு தொடர்பாக பல எதிர்ப்புகள் போராட்டங்கள் நான் சந்தித்தேன்

இவற்றை எல்லாம் தாண்டி நீதிமன்றம் மூலம் ராஜகோபால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் எனது நியாயமான போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றமும் ராஜகோபால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.

அந்த நாள் என் வாழ்நாளில் எனக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்தது.எனது கணவரின் கொலை வழக்கில் குற்றவாளி என உறுதியாகி ஆயுள் தண்டனை பெற்ற பிறகு ராஜகோபால், தனது உடல் நிலையை காரணம் காட்டி ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தம் அளித்தாலும், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது. எனக்கும் இந்த நிகழ்வு ஆறாத வடுவாக உள்ளது என ஜீவஜோதி தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்