மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் ராஜகோபால் மரணம்!

Report Print Kabilan in இந்தியா

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, சரவண பவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் மூன்றாவதாக ஜீவஜோதி என்ற பெண்ணை மணக்க விரும்பினார். ஆனால், அதற்கு தடையாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இருந்ததால் அவரை கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நலக்குறைவு காரணத்தால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என ராஜகோபால் மகன் உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி மனுதாக்கல் செய்திருந்ததால், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, 72 வயதான ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் மரணமடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்