லொட்டரியில் பல லட்சம் பரிசு... டிக்கெட்டுடன் தலைமறைவான நண்பன்: அதிர்ச்சியில் இளைஞன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் நண்பர்கள் இருவர் ஒன்றாக வாங்கிய லொட்டரியில் 65 லட்சம் பரிசு விழுந்த நிலையில், அதில் ஒருவர் டிக்கெட்டுடன் தலைமறைவான சம்பவம் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மூன்னார் பகுதியில் நண்பர்கள் இருவர், ஹரிகிருஷ்ணன் மற்றும் சாபு ஆகியவர்கள் ஒன்றாக இணைந்து அரசு வெளியிடும் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளனர்.

இதில் முதல் பரிசாக 65 லட்ச ரூபாய் வென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் இணைந்து மூன்றாவது நண்பர் ஒருவருடன் எஸ்பிஐ வங்கிக்கு சென்று, பரிசு வென்ற இருவருக்கும் ஒன்றாக இணைந்து வங்கிக் கணக்கு ஒன்றை துவங்க கோரியுள்ளனர். அப்போது ஹரிகிருஷ்ணன் வசம் டிக்கெட் இருந்துள்ளது.

இதனையடுத்து அடுத்த நாள் வங்கிக்கணக்கு துவங்க அடுத்த நாள் செல்ல வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கியில் இருந்து வெளியேறும்போது சாபுவிடம் டிக்கெட் இருந்துள்ளது.

அடுத்த நாள் காலையில், வங்கிக்கு செல்ல சாபுவை தேடிய ஹரிகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாபு டிக்கெட்டுடன் தலைமறைவாகியிருந்தார்.

உடனடியாக ஹரிகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சாபுவை பொலிசார் தேடி வருகின்றனர். மட்டுமின்றி, சாபு வேலை நிமித்தமாக ஹரிகிருஷ்ணனின் குடியிருப்பு அருகே வாடகைக்கு குடியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...