விடுதி அறையில் இளைஞருடன் சேர்ந்து தங்கிய இளம்பெண்.. கதவை உடைத்த ஊழியர்கள் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

சென்னை விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

சவுகார்பேட்டையை சேர்ந்தவர் காஜல் (19). கல்லூரி மாணவியாவார்.

இவரும் சுமேர்சிங் (23) என்ற இளைஞரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஜூன் 10ம் திகதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் அறை ஒன்றில் காஜல் இறந்து கிடந்தார்.

சுமேர்சிங் வாயில் நுரை தள்ளியநிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை உடைத்து போது உள்ளே அவர்கள் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காஜல் சடலத்தை கைப்பற்றிவிட்டு, சுமேர்சிங்கை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொலிஸ் சுமேர்சிங்கிடம் நடத்திய விசாரணையில் காஜலும், நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக குளிர்பானத்தில் ‘சயனைடு’ விஷம் கலந்து குடிக்க முடிவு செய்தோம்.

எங்களது திட்டப்படி காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்துவிட்டார். ஆனால் நான் லேசாக குடித்துவிட்டு பின்னர் துப்பிவிட்டேன். இருந்தாலும் சயனைடு விஷம் என்னை தாக்கிவிட்டது என்று தெரிவித்தார்.

இதனால் பொலிசார் முதல்கட்டமாக தற்கொலை வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்தநிலையில் காஜலின் மருத்துவ பரிசோதனை முடிவில் அவர் குளிர்பானத்தில் கலந்து குடித்த சயனைடு விஷத்தால் சாகவில்லை என்றும், கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.

இதனால் பொலிசார் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமேர்சிங்கிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் காதலி காஜலை கொலை செய்ததை சுமேர்சிங் ஒப்புகொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், காஜலும், நானும் 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்கள் காதலை காஜல் குடும்பத்தார் எதிர்த்தனர்.

காஜலுக்கு உடனடியாக வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. காஜல் என்னோடு செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறினார். அப்படியானால் நாம் இருவரும் ஓடிச்சென்று எங்காவது பதிவு திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று தெரிவித்தேன்.

ஆனால் காஜல் அதை ஏற்கவில்லை. ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டால் எனது குடும்பத்திற்கு அவமானமாகிவிடும் என்று காஜல் மறுத்துவிட்டார்.

எங்காவது ஓடிச்சென்று போய் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று காஜல் தெரிவித்தார். தற்கொலை முடிவில் எனக்கு விருப்பம் இல்லை.

பின்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் அறையில் தங்கினோம்.

தற்கொலை செய்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் ரூ.6 ஆயிரம் கட்டி சயனைடு விஷம் வாங்கினேன்.

குளிர்பானத்தில் சயனைடு விஷத்தை கலந்தேன். ஆனால் மனதளவில் எனக்கு தற்கொலை செய்துகொள்வதில் விருப்பம் இல்லை.

முதலில் சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை காஜல் குடித்துவிட்டார். நான் குடிப்பதுபோல நாடகமாடிவிட்டு, சிறிதளவு குடித்துவிட்டு பின்னர் அதை வெளியில் துப்பிவிட்டேன்.

இதற்குள் காஜல் மயக்கமடைய தொடங்கினார். நீ ஏன் குடிக்கவில்லை? என்று அந்த அரைகுறை மயக்கத்திலும் என்னிடம் சண்டை போட்டார்.

மேலும் குளிர்பானத்தை வாந்தி எடுத்ததால் காஜல் உயிர்பிழைத்து கொள்வார் என்று நினைத்தேன். உயிர் பிழைத்தால் நமக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று பயந்தேன். இதனால் காஜல் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினேன். சற்று நேரத்தில் அவர் பிணமாகிவிட்டார்.

சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை நான் சிறிதளவு குடித்து, அதை துப்பிவிட்டாலும் அதன் விஷத்தன்மை என்னை தாக்கியது. நானும் மயக்கமடைந்து விட்டேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...