டோனி மீது கடும் கோபம்.. இந்திய ரசிகர்கள் செய்த கேவலமான செயல்: அதிர்ச்சியூட்டும் வீடியோ

Report Print Basu in இந்தியா

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் டோனி, கோஹ்லி உட்பட இந்திய அணியின் போஸ்டர்களை எரித்துள்ளனர்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

வெற்றிகளும் தோல்விகளும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் கிரிக்கெட் ஆர்வமுள்ள ரசிகர்கள் எப்போதும் தங்கள் அணி வெற்றிபெறும் அணியாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் உலகில் மிகவும் ஆக்ரோஷமான ரசிகர்கள் என்பது விவாதத்திற்குரியது. புதன்கிழமை, உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிய பின்னர் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயமே நொறுங்கிவிட்டது.

எதிர்பாராத தோல்வியை அடுத்து, பெரும்பான்மையான ரசிகர்கள், இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இருப்பினும், சிலர் எதிராக உள்ளனர். தோல்வியால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சில ரசிகர்கள் டோனி மற்றும் இந்திய அணியின் போஸ்டர்களை எரிப்பதைக் காண முடிந்தது.வெவ்வேறு வயதான ரசிகர்கள், போஸ்டர்களை எரித்து, டோனி மற்றும் கோஹ்லிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...