பல இடர்பாடுகளுக்கு பின் வைகோ-வின் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில், ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அபராதத்தை செலுத்திய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். எனவே, அவரது ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில், மாநிலங்களவைக்கான வேட்புமனுவை வைகோ தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது குறித்த மனு ஏற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்