என் பதட்டம் தணியல.. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல? புலம்பும் அற்புதம்மாள்

Report Print Kabilan in இந்தியா

பேரறிவாளன் விடுதலை வேண்டி அவரின் தாயாரான அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

அதேபோல் தனது மகன் பேரறிவாளனுக்கு விடுதலை வேண்டி, அவரது தாயார் அற்புதம்மாள் பல்வேறு வழிகளில் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது மகனின் விடுதலை குறித்து, தன் வேதனை குறித்தும் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அற்புதம்மாள் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘வயிற்றில் குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாதம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்றுடன் 10 மாசம் முடியுது.

என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல?’ என தெரிவித்துள்ளார். மேலும் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்