தலைவிரி கோலத்தில் சுற்றும் நிர்மலா தேவி- புகைப்படத்துடன்

Report Print Abisha in இந்தியா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தர்கா ஒன்றில் தலைவிரி கோலத்தில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியை காவல்துறையினர் வலுகட்டாயமாக வெளியேற்றினர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்துள்ள நிர்மலாதேவி, நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு வந்த அவர், அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை கணவனும் குடும்பத்தினரும் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தர்கா ஒன்றிற்குச் சென்றார்.

குழந்தைகளுக்கு மந்திரிக்கும் பகுதிக்கு சென்ற அவர் அங்கு தரையில் அமர்ந்து தலைவிரி கோலமாக கண்களை மூடிக் கொண்டு தனக்குத்தானே புலம்பிகொண்டிருந்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார், நிர்மலாதேவியை எழுந்துபோக கூறினர். நிர்மலாதேவி எழுந்து செல்லாததால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்