மக்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை... தற்கொலை செய்த இளைஞரின் நெஞ்சை உருக்கும் காரணம்

Report Print Vijay Amburore in இந்தியா

தன்னுடைய உடலில் பெண் மாற்றும் ஏற்பட்டதை நண்பர்கள் கேலிசெய்ததால் அவமானம் தாங்க முடியாமல் மும்பையை சேர்ந்த இளைஞர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த அவின்ஷு படேல் (20) என்கிற மாணவர் சென்னையில் தங்கி சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாகவே இவருடைய உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், பெண்ணுக்கு உண்டான குணாதிசயங்கள் தென்பட்டுள்ளது. அவருடைய உடல் பாவனையிலும், நடையிலும் மாற்றம் ஏற்படுவதை கவனித்த அவனுடைய நண்பர்கள் சில 'கே'(Gay) என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் அவின்ஷு படேல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான்.

இந்த நிலையில் கடந்த 4ம் திகதி மும்பையில் உள்ள தன்னுடைய பழைய நண்பனுக்கு போன் செய்துள்ளான். "எனக்குள் பெண் தன்மை ஏற்பட்டு வருகிறது என அனைவரும் கேலி செய்கிறார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" எனக்கூறிவிட்டு போனை துண்டித்துள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனுடைய நண்பன் பலமுறை போன் செய்தும் பதில் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் போன் செய்யும் போது நீலாங்கரை கடற்கரையில் அவின்ஷு படேல் உடல் ஒதுங்கியிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவின்ஷு பேஸ்புக் பக்கத்தை பொலிஸார் ஆராயும்பொழுது, “நான் ஒரு பையன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நான் நடப்பது, நினைப்பது, உணருவது, பேசுவது ... இது ஒரு பெண் போன்றது. இந்தியாவில் வாழும் மக்கள் இதை விரும்புவதில்லை" என ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவிட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதற்கிடையில் அவின்ஷுவின் பெற்றோர் சென்னை வந்து மகனின் உடலை பெற்று செல்வதற்கான செலவினங்களை தனியார் அமைப்பு ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்