கணவரின் கண்முன்னே துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்ட மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

விருதுநகர் மாவட்டத்தில் கணவரின் கண்முன்னே மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி பூமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பூமாரியின் வீட்டிற்கு மாரிக்குமார் சென்றுள்ளார். வீட்டில் கணவர் இருப்பதால் வெளியில் செல்லுமாறு பூமாரி கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்ட மாரிக்குமார், பூமாரியின் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். மாரியப்பனின் கண்முன்னே அவரை அடித்துக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாரியப்பன் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, மாரிக்குமாரை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பூமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers