தத்தளிக்கும் மும்பை..! 10 ஆண்டுகளில் இல்லாத கனமழை: 27 பேர் பலி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் பெய்து வரும் கனமழையால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலாத் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த 27 பேர் உயிரிழந்துள்ளனர், 75 பேர் மருத்துவமனைியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மும்பையில் இருக்கும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மும்பை உள்ளுர் ரயில்கள் குறைவாக இயக்கப்படும் நிலையில், மிகவும் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


மும்பையில் தரையிறங்குவதாக இருந்த பல விமானங்கள் அகமதாபாத், கோவா மற்றும் பெங்களூருவுக்கு திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தின் பிரதான ரன்-வே நேற்றிரவு மூடப்பட்டது. தற்போதைக்கு ரன்வே ஒன்று மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

கடலில் உயர் அலைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. மக்களுக்கு உதவி செய்ய பொலிஸ், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட பல துறையினர் முடக்கிவிடப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்