மனைவியை தவிக்கவிட்டு திருநங்கையுடன் தனிக்குடித்தனம்! 3 வருடங்களுக்கு பின்னர் சிக்கிய கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமான கணவன் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுரேஷ் ஜெயப்பிரதாவையும் இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு கடந்த 2016-ல் மாயமானார்.

அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் ஜெயப்பிரதா பொலிசில் புகார் செய்தார். பொலிசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் டிக்டாக் வீடியோவில் சுரேஷ் இருப்பதை அவரிடம் காண்பித்தார்.

அந்த வீடியோவை ஜெயப்பிரதா பொலிசாரிடம் காண்பிக்க, பொலிசார் அந்த டிக்டாக் வீடியோவை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் சுரேஷ் ஓசூரில் ஒரு திருநங்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் ஓசூர் சென்ற பொலிசார் சுரேஷை அழைத்து வந்து அவருக்கு புத்திமதி கூறி மனைவி ஜெயப்பிரதாவுடன் சேர்த்து வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், சுரேஷ் வீட்டில் இருந்து சென்ற பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது அங்குள்ள திருநங்கையருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரை திருமணம் செய்து அங்கேயே குடும்பம் நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்