மின்னல் வேகத்தில் விரட்டிய புலி.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்: திக் திக் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர்களை, மின்னல் வேகத்தில் வந்த புலி ஒன்று விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

சுற்றுலா தளமான வயநாடு அருகே முத்தங்க வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவர்களை நோக்கி மின்னல் வேகத்தில் புலி பாய்ந்து வந்தது.

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி மயிரிழையில் புலியிடம் இருந்து தப்பினர். இந்நிலையில் சில வினாடிகள் மட்டுமே பின்னால் துரத்தி வந்த புலி வேகமாக சாலையை கடந்து மறைவான பகுதிக்கு சென்றுவிட்டது.

இந்த காட்சியை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஏதேச்சையாக படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்