ஓடுபாதையில் இருந்து வெளியேறி புல்வெளியில் ஓடிய விமானம்: பயணிகள் நிலை என்ன?

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் மங்களூரு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய பின்னர் ஓடுபாதையில் இருந்து வெளியேறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்த வந்த ஐ.எக்ஸ் 384 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மங்களூரு விமானம் தரையிறங்கியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஓடுபாதையில் இருந்து திசை திரும்பிய பின்னர், ஐஎக்ஸ் 384 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிலையத்தில் புல்லில் சிக்கிக்கொண்டது.புல்லில் சிக்கிக்கொண்ட விமானம் விரைவில் இழுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பொறியாளர்கள் பரிசோதிப்பார்கள் என்று மங்களூரு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பொறியாளர்கள் சோதனை செய்கிறார்கள். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குநருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்