திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த இளைஞர்.. அவர் வீட்டுக்கு குடிவந்த திருமணமான பெண் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தோஷம் நீக்குவதாக கூறியும், அருள் வாக்கு சொல்வதாக நடித்தும் ஏமாற்றி, குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகைகளை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்குன்றம் அடுத்த பாலாஜி கார்டன் பகுதியில் பஞ்சுநாதன் - ராஜாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ராஜா (28) ராஜ்குமார் (24) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் ராஜாவுக்கு பஞ்சுநாதனும், ராஜாத்தியும் சில காலமாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்த நிலையில் வரன் அமையாமல் இருந்துள்ளது, இது ராஜாவையும் அவர் பெற்றோரையும் கவலையில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ராசாத்தி வீட்டுக்கு லொறி ஓட்டுனர் ராசு (36) அவரது மனைவி சங்கமித்ரா (27) ஆகியோர் வாடகைக்கு குடிவந்தனர்.

வீட்டின் உரிமையாளர்களுடன் நன்றாக பழகிய சங்கமித்ரா, ராஜாவுக்கு தோஷம் இருப்பதால் தான் திருமணம் நடக்காமல் உள்ளது என கூறினார்.

மேலும் தனக்கு தெய்வ சக்தி இருப்பதால் விஷேட பூஜை செய்தால் ராஜாவுக்கு திருமணம் நடக்கும் என கூறினார்.

பின்னர் பூஜை செய்ய வேண்டும் என ராசாத்தியிடம் இருந்து 18 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை சங்கமித்ரா கேட்டார்.

சரி தங்கள் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்ற நோக்கில் ராஜா சம்மதத்துடன் அவர் பெற்றோர் பணம் நகையை கொடுத்தனர்.

இதன் பின்னர் வாங்கிய நகை பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

திடீரென வீட்டை காலி செய்யப் போவதாக சங்கமித்ரா கூறவே, செங்குன்றம் பொலிசில் ராஜாத்தி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சங்கமித்ராவைப் பிடித்து பொலிசார் விசாரித்த போது, நகைகளை அடகு வைத்து விட்ட தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் நகைகளை மீட்ட பொலிசார் சங்கமித்ராவைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்