வெளிநாட்டில் நடன விடுதியில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழ் யுவதிகள்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் நடன விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் கோவையை சேர்ந்த 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக இவர்கள் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அங்குள்ள நடன விடுதிகளில் நடனமாட கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் கோவையை சேர்ந்த இந்த 4 யுவதிகளையும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் துபாய் பொலிசார் மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த நால்வரையும் துயாய்க்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அழைத்து சென்ற நபர் இவர்கள் நால்வரையும் அறை ஒன்றில் அடைத்து வைத்து, நடன விடுதியில் நடனமாட கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அந்த நால்வரில் ஒருவர் கோவையில் உள்ள உறவினர்களுக்கு உதவி கேட்டு வாட்ஸ் அப் தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவல் இந்திய வெளிவிவகார இணை அமைச்சருக்கு தெரியவரவே, அவர் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து துபாய் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்ட நால்வரும் கேரளா செல்லும் விமானம் ஒன்றில் அனுப்பி வைக்கப்படுவதாக அங்கிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்