விதவை பெண் செய்த மோசமான செயல்.. அவர் செல்போனை பார்த்த போது வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் விதவை பெண் தனது சகோதரரை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் கவுரம்மா. இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

இதன்பின்னர் கவுரம்மா தனது மகளுடன் சகோதரர் ராஜசேகர் வீட்டில் வந்து தங்கினார்.

ராஜசேகர் தான் கவுரம்மா மற்றும் அவர் மகளை கவனித்து கொண்டார்.

இந்நிலையில் கவுரம்மா மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த ராஜசேகர் மாப்பிள்ளையாக ஒருவரை தேர்வு செய்தார்.

ஆனால் அவரின் தேர்வு கவுரம்மாளுக்கு பிடிக்காததால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் இதை கேட்காத ராஜசேகர் திருமண வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் சகோதரர் மீது ஆத்திரம் கொண்ட கவுரம்மாள் முத்துராஜ், முன்னா, அர்ஜி ஆகிய மூவரிடம் ரூ 3 லட்சம் பணம் கொடுத்து ராஜசேகரை கொலை செய்ய கூறினார்.

அதன்படி ராஜசேகரை மூவரும் சேர்ந்து அடித்து கொன்றனர், பின்னர் காவல் நிலையம் சென்ற கவுரம்மாள் தனது மகளுக்கு ராஜசேகர் பார்த்த மாப்பிள்ளை தான் அவரை கொலை செய்துவிட்டதாக கூறினார்.

ஆனால் அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் கவுரம்மாளின் செல்போனை வாங்கி பார்த்து போது முத்துராஜ், முன்னா, அர்ஜியுடன் அவர் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் கவுரம்மாள் அனைத்தையும் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து பொலிசார் கவுரம்மாள் உட்பட நால்வரையும் கைது செய்துள்ளனர்.

மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த நபரை அவர் சகோதரியே கொலை செய்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்