வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறியதுடன் நிர்வாணமாக்கி ஊர்வலம்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, நிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணொருவர், தனது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். பழங்குடியினப் பெண்ணான இவர், கடந்த 22ஆம் திகதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் அத்துமீறிய அவர், பாலியல் வன்கொடுமை செய்து பின்னர், அப்பெண்ணை நிர்வாணமாக்கி வெளியே இழுத்து சென்றுள்ளார்.

இதனை அறிந்த அந்நபரின் பெற்றோர், குறித்த பெண்ணை மீட்டு உடை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அந்நபரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், குறித்த பெண் தனக்கு பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம் இருந்ததால் அவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிசார் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்