நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது.. உண்மையை உடைத்த சீமான்

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், நாங்கள் வெளிப்படையாக மக்களிடம் பிச்சை எடுக்கின்றோம். எங்களிடம் ஏது காசு, வாக்குக்கு காசு கொடுக்கிறோமா? நாங்கள் கூட்ட மேடையில் உண்டியல் குலுக்கி அதிலிருந்து தான் எடுத்துக்கொள்கிறோம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் பணம் கொடுப்பதாக சொல்வதெல்லாம் சும்மா, அவர்கள் எனக்கு தர வேண்டிய தேவை என்ன? என்னை போல் பலர் ஈழத்தை ஆதரித்து பேசுகின்றனர், அவர்களுக்கு வராத காசு எனக்கு மட்டும் ஏன் வர வேண்டும்.

எனக்கு பணம் வருகிறது என்றால், அதை கவனிக்காமல் இந்திய வருமானவரித் துறை, உளவுத் துறை என்ன வேலை பாத்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கு சென்று உழைக்கின்ற நாம் தமிழர் கட்சியில் இருக்கின்றவர்கள், தங்கள் உழைப்பில் ஒரு துளியை சேமித்து அவர்கள் அனுப்புகின்றன பணம் தான்.

சில தன்னார்வ தமிழ் உணர்வு மிக்க ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து போன தமிழர்கள், இந்த அரசியல் தேவை என அவசியம் இருப்பதால் அவர்கள் கொடுக்கின்றது தான். பணத்திலேயே படுக்கை செய்து அதில் படுத்துக்கொள்ளும் கட்சிகள், எங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேட்பது வேடிக்கையாக உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்