பாரிய விபத்தில் சிக்கிய போர் விமானம்.. சாதுர்யமாக செயல்பட்ட விமானி! வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

பறவை மோதியதால் இயந்திரம் பழுதான விமானத்தை எந்த விபத்தும் ஏற்படாமல் சாதுர்யமான முறையில் விமானி தரையிறக்கியுள்ளார்.

அரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் உள்ள விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் பெட்ரோல் டேங்குகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் புறப்பட்டுள்ளது.

அடுத்த சில வினாடிகளிலே விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால் விமானத்தின் ஒரு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்படபோவதை அறிந்த விமானி, உடனடி நடவடிக்கையாக விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்குகளையும், சிறிய வெடிகுண்டையும் தனது கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்தி தனியாக கழன்று கீழே விழச் செய்தார்.

சரியாக அந்த பொருட்கள் குடியிருப்பு பகுதியை கடந்து சாலையிலும் ஒரு சில மட்டும் வீட்டின் மேற்கூரையில் விழுந்துள்ளன.

இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், தீயை அணைத்துவிட்டு, அப்பகுதியில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் விழுந்துள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இந்திய விமானப்படை, அப்பகுதியில் இருந்த மக்களையும் விமானத்தையும் சதுரமாக செயல்பட்டு காப்பாற்றியிருப்பதாக விமானியை பாராட்டியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்