ஆணவ கொலையின் உச்சம்... மகளை ஆணவக் கொலை செய்து குழந்தையை தூக்கிச் சென்ற பெற்றோர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் குழந்தை பெற்று ஒரு வாரமே ஆன நிலையில், மகளை பெற்றோர் கொடூரமாக அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் உசிரிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. இவர் கேசவலு என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு ஹேமாவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வெளியூரில் கணவருடன் வாழ்க்கை நடந்தியுள்ளார்.

இந்நிலையில் கர்ப்பமான ஹேமாவதிக்கு கடந்த ஒரு மாதம் முன்பு குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து ஹேமாவதியை ஆட்டோவில் வீட்டிற்கு கேசவேலு அழைத்து வந்த போது, திடீரென்று ஆட்டோவை வழி மறித்த ஹேமாவதி குடும்பத்தினர் இருவரையும் சரமாரி தாக்கியுள்ளனர்.

இதில் குழந்தை பெற்று ஒருவாரமே ஆன ஹேமாவதி, சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கேசவலு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் போது ஹேமாவதியின் பெற்றோர் குழந்தையை மட்டும் ஒன்றும் செய்யாமல் தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக இது போன்று இந்தியாவில் ஆணவப்படுகொலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்