கதவை திறந்ததும் கதறிய குழந்தைகள்: அனாதையாக தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய பெற்றோர்

Report Print Vijay Amburore in இந்தியா

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே புடவையில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மதன் (34), கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சரஸ்வதி (30) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு வெற்றிமாறன் (8) என்கிற மகனும், பிரவீனா (5) என்கிற மகளும் உள்ளனர். அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் இருவரையும், காலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துசென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்துவருவதை மதன் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

நேற்று மாலை பள்ளி முடிந்தும் அழைத்துவருவதற்கு மதன் செல்லாததால், வெற்றிமாறனும், பிரவீனாவும் சக மாணவர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீடு உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால், அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர். அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய தம்பதியை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளையும் அனாதையாக தவிக்கவிட்டு ஒரே புடவையில் பெற்றோர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்