கணவனால் நான்கு வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... உண்மை தெரிந்தும் மனைவி செய்த அதிர வைக்கும் செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நான்கு வயது சிறுமி சொந்த பெரியப்பாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரின் மனைவி அவருக்கு உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தம்பதியின் 4 வயது மகள் காணவில்லை என்று அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால் பொலிசார் இது குறித்து நடத்திய விசாரணையில்,சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி வந்த போது, சிறுமியின் பெரியப்பாவும், முன்னாள் இராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரமிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் நான் தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டதால், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சொந்த பெரியப்பாவே சிறுமியை இப்படி செய்திருப்பது தமிழகத்தையே உலுக்கிய சம்பவமாக மாறியது. அதன் பின் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் கொலையை மறைக்க அவரது மனைவி ராஜம்மாளும் உதவியது தெரியவந்தது.

இதையடுத்து ராஜம்மாளை கைது செய்த பொலிசார், அவர் மீது தடயங்களை அழித்தது தொடர்பான பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீனாட்சி சுந்தரத்தின் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், இருவரையும் முகப்பேர் மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் மீனாட்சி சுந்தரத்தின் கை உடைந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்