தங்கையின் திருமணம்... அம்மாவின் ஆசை: வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கும் தமிழனின் நிலை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மாற்றுத்திறனாளி வீரர், தற்போது போதிய உதவி இல்லாமல் அடுத்தடுத்து சாதிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

தேனி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு மூன்று சகோதரிகள், தந்தையை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டதால், அவரின் தாய் தான் தன்னுடைய கடின உழைப்பால் கவனித்து வருகிறார்.

இதில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தபடியாக தங்கை திருமணத்திற்கு அவரின் தாய் உழைத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய மகனின் திறமைக்காவும் போராடி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு மூன்று பெண்பிள்ளைகள், ஒரு பையன் அதில் 2 பேருக்கு திருமணம் முடிந்துவிட்டது. 3-வது சகோதரியின் திருமணத்தை நான் வேலைக்கு போய் முடித்து வைக்கிறேன் என்று பாலமுருகன் சொல்லியுள்ளான்.

அவனின் திறமையை கண்டு ஊக்குவித்தேன், இதற்காக பணம் எல்லாம் செலவழித்தேன், அதே போன்று அவனும் விளையாட செல்லும் இடங்களில் ஜெயித்து வருகிறான்.

ஆனால் அவனை விளையாட்டுப் பயிற்சி வகுப்புல சேர்த்துவிடவோ, சத்தான உணவுவை செஞ்சித்தரவோ, விளையாட்டுப் போட்டியில கலந்துக்க வெளிநாடுகளுக்குப் அனுப்பவோ என்னிடம் பணம் இல்லை.

இருந்த பணத்தை வைத்து அவனை இந்தளவிற்கு கொண்டு வந்துவிட்டேன், இனி என்னால் ஓட முடியாது. இந்தியாவுக்காக பல முறை பரிசு வாங்கி கொடுத்திருக்கான்.

ஒரு வேலை இவனுக்கு கிடைத்தால், அதை வைத்து விளையாட்டில் உயர்ந்துவிடுவான், தங்கையின் திருமணத்தையும் நடத்திவிடுவான்.

இப்போதைக்கு அவனுக்கு ஒரு நல்ல வேலை அது மட்டும் போதும் எங்கள் குடும்பம் கரை ஏறிவிடும் என்று கூறியுள்ளார்.

பாலமுருகனை கல்லூரி வரை படித்துள்ளார். கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்த பாலமுருகனுக்கு, போதிய வசதிகள் இல்லாமல் மாவட்ட அளவில்கூட விளையாட முடியாத சூழல் நிலவியுள்ளது.

அதை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் பாலமுருகனை ஊக்கப்படுத்தி அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல மாநில அளவிலான போட்டிகளில் பாலமுருகன் சாதித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஏழு நபர்கள் பங்கேற்கும் மினி கால்பந்து போட்டிக்குத் தேர்வானது மட்டுமல்லாமல், அணிக்கு தலைமைப் பொறுப்பும் ஏற்றார் பாலமுருகன். அதில் அவரது அணி இரண்டாம் பரிசு பெற்றது. அதன் பிறகு, தெற்காசியப் போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இப்படி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த அவரிடம் பேசிய போது, சிறு வயதில் இருந்தே கால்பந்து மீது மிகவும் ஆரவம், பல கேலி, கிண்டல்களுக்கு பின்னரே நான் சாதித்திருக்கிறேன்.

இந்தியாவுக்காக விளையாடி பரிசு வாங்கிய போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அக்டோபர் மாதம் ஜோர்டான் நாட்டுல மினி கால்பந்து போட்டியில கலந்துக்க இந்தியா சார்பா தேர்வாகியிருக்கேன். ஆனா, அங்கே போறதுக்குக்கூட என்னிடம் பணம் இல்லை.

எங்க அம்மா எனக்காக நிறைய கடன் வாங்கியிருக்காங்க, இதனாலே எங்கள் குடும்பம் வட்டிக்கு மத்தியில் சிக்கியிருக்கு ஜோர்டான் போக முடியுமானு தெரியலை. அங்கே போனா, நிச்சயம் தங்கம் ஜெயிச்சு, இந்தியாவுக்குப் பெயரையும் புகழையும் சேர்ப்பேன்.

உனக்கு தான் கை இல்லையே ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றெல்லாம் பேச்சு கிண்டல் வந்திருக்கு, நான் கை இல்லைனா என்ன? கால் இருக்கேன் என்று சாதித்துக் கொண்டிருக்கிறேன், தற்போது இருக்கும் நிலையில் என்னால் ஜோர்டான் நாட்டுக்கு எப்படி போகப்போகிறேன் என்றே தெரியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்