தமிழகத்தை உலுக்கிய 4 வயது சிறுமியின் கொடூர மரணம்: பொலிசார் வெளியிட்ட முழுத் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை ஆவடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் கொடூர சம்பவம் அனைவரது நெஞ்சையும் பதற வைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற முன்னாள் ராணுவ வீரரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடியிருப்பில் விடப்பட்ட சிறுமியை காணவில்லை என தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமியின் உறவினரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவருமான மீனாட்சி சுந்தரத்திடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கொலை செய்துவிட்டு கழிவறையில் உள்ள வாளியில் சாக்கு மூட்டையில் அவர் கட்டி வைத்தது தெரியவந்தது.

சிறுமியின் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொலை குறித்து பேசிய பொலிசார், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மீனாட்சிசுந்தரம்,

தனது வீட்டுக்கு அவரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்து உள்ளார்.

பின்னர், அவர் தனது படுக்கை அறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, அவள் சத்தம் போட்டு அலறி உள்ளார்.

இதனையடுத்து, யாராவது வந்து விடுவார்களோ என பயந்த மீனாட்சிசுந்தரம் வீட்டில் கிடந்த கயிற்றை எடுத்து சிறுமியின் கழுத்தில் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, அவளது உடலை அரிசி கோணிப்பையில் வைத்து அவரது வீட்டு கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.

வெளியில் சென்று வீடு திரும்பிய சிறுமியின் தாயார், தனது மகளை காணவில்லை என கூறி மீனாட்சி சுந்தரம் வீட்டுக்கு தேடி வந்துள்ளார். அப்போது அவர், வெளியில் தான் இருப்பாள் தேடுங்கள் என கூறி அனுப்பி உள்ளார்.

வீட்டுக்கு வெளியே பல்வேறு இடங்களில் தேடி கொண்டிருந்தார். அப்போது மீனாட்சிசுந்தரம் சிறுமியின் உடலை கோணிப்பையுடன், ராஜேந்திரன் வீட்டுக்கு பின்புறமாக எடுத்து சென்று அவரது கழிவறையில் மறைத்து வைத்துள்ளார். அவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சிறுமியை தேடி உள்ளார்.

மேலும், சிறுமியின் தாய் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் வீட்டுக்குள் வந்து தேடிய போது அவரது சடலம் கழிவறையில் கோணிப்பையுடன் தண்ணீர் டப்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும், பினாயில் வாடை வந்ததை அடுத்து மீனாட்சிசுந்தரம் வீட்டையும் பொலிசார் சோதனை செய்தனர்.

அப்போது அவரது படுக்கை அறையில் சிறுமியின் ஒரு கம்மல், கண்ணாடி வளையல்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது.

இதோடு மட்டுமில்லாமல் அவரது வீட்டு ஜன்னல் ஸ்கீரினில் ரத்த கரை படிந்து இருந்தது. மேலும், அவர் குழந்தையை கொன்று விட்டு கழிவறையில் கழுவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்