குன்றத்தூர் அபிராமி! வேலூர் தீபிகா.. போன்ற முறை தவறிய பழக்கத்தால் தமிழகத்தில் நடந்த கொலைகள் எவ்வளவு?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முறை தவறிய பழக்கத்தால் கடந்த 10 ஆண்டுகளில் 1311 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் முறை தவறிய பழக்கத்தால் கொலைகள் நடப்பது தினம் வாடிக்கையாகி விட்டது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது போல தவறான தொடர்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி தாக்கல் செய்தார்.

அதில், முறை தவறிய பழக்கம் காரணமாக 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் 158 கொலைகள் நடந்துள்ளன.

தமிழகம் முழுவதும் 2009-ம் ஆண்டு 106 கொலைகளும், 2010-ம் ஆண்டு 125, 2011-ம் ஆண்டு 132, 2012-ம் ஆண்டு 126, 2013-ம் ஆண்டு 122, 2014-ம் ஆண்டு 134, 2015-ம் ஆண்டு 131, 2016-ம் ஆண்டு 138, 2017-ம் ஆண்டு 116, 2018-ம் ஆண்டு 134, 2019-ம் ஆண்டில் நேற்று வரை 47 என்று கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,311 கொலைகள் நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேசிய நீதிபதிகள், சமூகத்தில் முறை தவறிய பழக்கம் பெருகிவிட்டதாகவும், இதனால் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர்

இதன் காரணமாக பெற்ற குழந்தையை தாய் கொலை செய்கிறாள். தினமும் பத்திரிகைகளில் இதுதொடர்பான செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால், குடும்பமும், திருமண உறவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பிரச்சினையை சாதாரணமாக எண்ணாமல், மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

பலாத்கார வழக்கில், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில், ஆபாச படம் தான் முக்கிய காரணமாக உள்ளன.

எனவே, இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் திகதிக்கு தள்ளி வைப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers