அனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி.. குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்றோரை இழந்த அனாதை பெண்ணுக்கு கோடீஸ்வரரும், அமைச்சருமான மல்லா ரெட்டியும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் புஷ்பா. பெற்றோரை இழந்த இவருக்கு மாநில அமைச்சரான மல்லா ரெட்டியும் அவர் மனைவி கல்பனாவும் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கிஷோர் என்பவரை மணமகனாக தேர்வு செய்த அவர்கள் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து புஷ்பா - கிஷோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மேலும், புஷ்பா பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ 2.35 லட்சத்தை வங்கி கணக்கில் மல்லா செலுத்தியதோடு, ரூ. 25000 பணத்தையும் புதுமணத்தம்பதிக்கு கொடுத்தார்.

மல்லா - கல்பனா தம்பதியின் இந்த மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers