நள்ளிரவில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிசூடு

Report Print Vijay Amburore in இந்தியா

நள்ளிரவில் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பெண் பத்திரிக்கையாளர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த மிதாலி சந்தோலா என்கிற பெண் பத்திரிக்கையாளர் நேற்று இரவு 12.30 மணியளவில் டெல்லி நோக்கி தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அவருடைய கார் மீது முட்டை மற்றும் கற்களை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனை பொருட்படுத்தாமல் மிதாலி, காரை ஓட்டிக்கொண்டே சென்றுள்ளார். திடீரென அந்த நபர்கள் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சுட ஆரம்பித்துள்ளனர்.

இதில் ஒரு குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு அவருடைய கையை பதம் பார்த்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மிதாலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், குடும்பத்தை சேர்ந்த யாரேனும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers