கர்ப்பிணி சகோதரியை சுட்டுக் கொன்ற சகோதரர்கள்! கூறிய காரணம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி சகோதரியை, அவரது சகோதரர்களே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பெட்மா பகுதியைச் சேர்ந்தவர் குல்தீப் ரஜவத். இவர் அதே பகுதியைச் சேர்ந்த புல்புல் என்பவரை காதலித்து, கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த புல்புல், தனது வீட்டிற்கு சென்று தாய் மற்றும் சகோதரர்களை பார்க்க வேண்டும் என்று குல்தீப்பிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தாய் வீட்டிற்கு சென்ற புல்புல், அங்கு சகோதரர்கள் கார்த்திக், சுபம், தாய், தந்தை ஆகியோரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் புல்புல்-யின் வீட்டுக்கு வந்த அவரது சகோதரர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் புல்புல்-யின் நெற்றியில் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த புல்புல், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர், புல்புல்-யின் சகோதரர்களான கார்த்திக்கும், சுபமும் பொலிசாரிடம் சரணடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து குல்தீப் கூறுகையில், 8 மாதத்திற்கு முன் நாங்கள் திருமணம் செய்தோம். எங்கள் திருமணத்திற்கு புல்புல் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் அவரது சகோதரர்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர் என தெரிவித்துள்ளார்.

குல்தீப் ரஜவத்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers