இந்தியாவின் திருமணமான 15 நாட்களில் மனைவி நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹரியானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (36). இவர் மனைவி இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.
இந்த சூழலில் ஜோகிந்தர் மற்றும் வீரேந்தர் என்ற இருவர் தங்களை திருமண தரகர் என கூறி சுரேந்தரை அனுகினார்கள்.
28 வயது பெண்ணொருவர் சுரேந்தரை திருமணம் செய்ய விரும்புவதாகவும், இந்த திருமணத்தை நடத்தி வைக்க தங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கவும் கோரினார்கள்.
இதையடுத்து பெண் அழகாக இருந்ததால் ஒரு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 15 நாட்களுக்கு முன்னர் சுரேந்தர் அவரை மணந்தார்.
இந்நிலையில் நேற்று தனது உறவினரை காண ஊருக்கு போக வேண்டும் என மனைவி கூறிய நிலையில் அவருடன் சுரேந்தரும் ரயில் நிலையம் சென்றார்.
அங்கு சுரேந்தரின் போனை வாங்கி உறவினருடன் பேசுவதாக கூறிய மனைவி திடீரென மாயமானார்.
வெகுநேரமாகியும் அவர் திரும்பாத நிலையில் தரகர்களான ஜோகிந்தர் மற்றும் வீரேந்தரிடம் இது குறித்து சுரேந்தர் கூறினார்.
இதற்கு அவர்கள் சுரேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு பொய் வழக்கு போட்டு பொலிசில் சிக்க வைத்துவிடுவோம் என கூறினார்.
இதையடுத்து சுரேந்தர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிசில் புகார் அளித்தார்.
அதில் தன்னுடைய பணம், நகையை தூக்கி கொண்டு மனைவி ஓடிபோய் விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.