பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்துக்கு வந்த உயிர்.. பின்னர் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் உயிரிழந்ததாக பிணவறையில் வைக்கப்பட்டு, பின்னர் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காஷிராம் (72) என்ற முதியவர் ஒருவர், அண்மையில் சாலையில் மயங்கி விழுந்தபோது பொலிசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அன்றைய தினமே முதியவர் இறந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் மருத்துவமனை பிணவறை கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் மறுநாள் காஷிராம் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முயன்றபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை தொடரப்பட்டது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவர் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், பணியில் இருந்த மருத்துவரின் கவனக்குறைவால் முதியவர் உயிரிழந்ததாக கூறும் பொலிசார் அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்