தமிழ் சிறுமிக்கு அனுமதி மறுத்த பிரித்தானிய அரசு: கனிமொழி செய்த நெகிழ்ச்சி காரியம்

Report Print Vijay Amburore in இந்தியா

பிரித்தானிய வெளியுறவுத்துறையால் விசா மறுக்கப்பட்ட இளம் தமிழ் பாடகி ஜோதி, தனக்கு விசா கிடைக்க உதவிய திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த 19 வயதான இளம் வயலின் கலைஞரும், பாடகியான ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம் பகவன் நாகராஜு ஆகியோருக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை விசா வழங்க மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கொடுத்த விளக்கத்தில், "இந்தியாவில் இருவருக்கும் போதுமான உறவுகள் இருப்பதாக தெரியவில்லை. அதாவது அவர்கள் பயணத்தின் முடிவில் இங்கிலாந்தை விட்டு வெளியேற மாட்டார்கள்" என தாங்கள் நம்புவதாக கூறியிருந்தனர்.

இந்த செய்தி இணையம் முழுவதும் வைரலாகி ஜோதிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனை அறிந்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசி ஜோதிக்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கனிமொழியின் உதவிக்கு நன்றி தெரிவித்து ஜோதி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers