அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் திருநங்கையின் சடலம்.. அதிரவைத்த பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 திருநங்கைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் திருநங்கைகள் அதிக அளவில் தங்கி இருந்தனர்.

கடந்த வாரம் அங்குள்ள கல்குவாரியில் குளிக்க சென்றபோது திருநங்கையான சவுமியா (24) கல்குவாரியில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் தேடி சவுமியா உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே காஞ்சீபுரம் அருகே குருவிமலை, திருநங்கைகள் நகரில் கடந்த 19-ந் திகதி இரவு புகுந்த சிலர் அங்கிருந்த திருநங்கைகளை கடத்தி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட திருநங்கைகளான சுதா (27), வசந்தி (24), ரெஜினா (26), வினோதினி (26), ஆர்த்தி (26) ஆகியோரை சிக்கராயபுரத்தில் மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட சென்னை குன்றத்தூர் கெளுத்திபேட்டையை சேர்ந்த திருநங்கைகள் மகா என்கிற மகாலட்சுமி (30), வடிவேலு என்கிற வடிவு (33), சுக்கிரியா என்ற சூரியா (19), லத்திகா என்ற ராமு (19), அருணி (22) மற்றும் கார் டிரைவர்கள் ரமேஷ் (31), கார்த்திக் (26), செல்வம் (28), ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் (25) ஆகிய 9 பேரை பொலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பொலிசார் கூறுகையில், மாங்காட்டில் திருநங்கைகள் ஒரு வீட்டில் தங்கி கடை, கடையாக சென்று பணம் வசூல் செய்வது மற்றும் கைத்தொழில் உள்ளிட்டவைகளை செய்து வந்தனர்.

இவர்களுக்கு தலைவியாக மகா செயல்பட்டு வந்தார். திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் ஒரு தொகையை மகாவிடம் கொடுக்க வேண்டும். இந்த குழுவில் இருந்த சவுமியா, மகாவிற்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகா, சவுமியா இப்படி செய்கிறாளே, நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று சக திருநங்கைகளிடம் கூறி உள்ளார்.

இந்தநிலையில் கல்குவாரியில் திருநங்கைகள் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் இடையே நடந்த மோதலில் சவுமியா தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து உடலை கல்குவாரியில் வீசி விட்டு அவர் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்து விட்டதாக சக திருநங்கைகள் நாடகமாடி உள்ளனர்.

அதே சமயம் சவுமியாவின் கொலையை மறைக்க தனக்கு தினமும் ஒவ்வொரு திருநங்கையும் தலா ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் இறந்த சவுமியா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் கொடுக்க பணம் தர வேண்டும் என மகா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் தினந்தோறும் ரூ.3 ஆயிரம் மகாவிடம் கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் மகாவின் தொல்லை அதிகமானதால் அங்கிருந்து தப்பித்து காஞ்சீபுரம் சென்று விட்டனர்.

பின்னர் பொலிசில் சிக்கி கொள்வோமோ என பயந்து போன மகா காஞ்சீபுரம் சென்று அங்கு இருந்த திருநங்கைளை கடத்தி வந்தார்.

இவ்வாறு பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers