இந்தியாவை கலங்க வைக்கும் மூளைக்காய்ச்சல்.. குழந்தைகள் பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

Report Print Basu in இந்தியா

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முசாபர்பூர் மாவட்டத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது.

தற்போது வெளியான தகவலின் படி முசாபர்பூர் மாவட்டத்தில் Acute Encephalitis Syndrome என்ற மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முசாபர்பூரில் உள்ள கிருஷ்ணா அரசு மருத்துவமனையில் 398 பேரும், கெஜ்ரிவால் தனியார் மருத்துவமனையில் 154 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். குறிப்பிட்ட பழங்களை தின்றதால் குழந்தைகள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 104 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பீகாரில் குழந்தைகள் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பது அதிகரித்து வரும் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்