வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி... 20 வயது வாலிபரால் நடந்த சோகம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி உமா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.

எட்டாம் வகுப்பு வரை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வெற்றி பெற்று, இவர் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து ஒரு நாள் தான் பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார்.

அன்றைய நாளே இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவியை அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு உமாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் சொன்ன தகவலால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்கு காரணம் யார் காரணம் என்பதை மாணவியிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளனர்.

பெற்றோர் மாணவியிடம் தொடர்ந்து கேட்ட போது, தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் உறவினர்கள் பொறுமையுடன் கேட்ட போது, உறவினரும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜு (20) என்பவர் தான் என கூறியுள்ளார்.

இதையடுத்து உமாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அப்போது பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நான் விளையாட்டாகப் பழகினேன். இப்படி ஆகும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

பொலிசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழு விசாரணைக்கு பின்னர் ராஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்