இரவில் கதவை திறந்து வைத்து தனியாக தூங்கிய மனைவி.. நேர்ந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.

இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி காற்றோட்டத்துக்காக இரவில் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த பெண் சத்தம் போட்டு கத்தியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று அந்த இளைஞரை சிறைபிடித்தனர்.

பின்னர் அங்குள்ள கம்பத்தில் அவரை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார்கள். இதன் பின்னர் அந்த இளைஞர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டாரா என்ற விபரம் தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்